
கழுத்தில் கபால மாலை... கட்டுக்கட்டாக ருத்ராக்ஷம்.... உடல் முழுவதும் சுடுகாட்டு சாம்பல்... அள்ளி முடித்த கொண்டை.... ஆடை இல்லா நிர்வாண கோலம்....
இப்படி பார்க்கவே பகீர் கிளப்பும் இவர் தான் அகோரி நாகசாது...
சமீப நாட்களில் இவரை தெரியாதவரே இருக்க முடியாது....
அம்மணியின் நிர்வாண தோற்றமே பட்டி தொட்டி எங்கும் இவரின் புகழை பரவச்செய்தது...
பிரதமரின் பதவியையே பறிப்பேன் என்று கூறியது முதல், கோவிலில் தீக்குளிக்க முயன்றது வரை இந்த அகோரி நாகசாது செய்த அட்ராசிட்டிகள் அனைத்தும் வேற ரகம்....
பிரபலம் என்றால் பிராப்ளம் வரத்தானே செய்யும் என்ற கதையாய்... அகோரி நாகசாது ஒரு இளம்பெண்னுடன் இல்லறவாழ்க்கையில் ஈடுபட்ட செய்தி இன்று தெலுங்கானாவை திகிலடைய வைத்திருக்கிறது.
சனாதனத்தை நிலைநாட்ட காரில் கிளம்பிய இந்த அம்மணி... தற்போது கட்டியணைத்து முத்தம்... கட்டிலில் சேட்டை.... கவர்ச்சி போஸ் என சம்சாரசகிதத்தில் குதித்திருக்கிறார்...
பெண்ணோடு பெண் சாமியார் குடும்பமா?....
ஆம்.... அகோரி நாகசாது பூஜைக்கு சென்ற இடத்தில் இளம்பெண்ணை மயக்கி அவரையே கல்யாணம் செய்து குடும்பம் நடத்தி வருவதாக கூறப்படுகிறது....
நடை உடை பாவனை என பார்க்க அச்சு அசல் பெண்ணாக காட்சி தரும் இந்த அகோரி உண்மையிலேயே பெண் இல்லை. ஒரு ஆண்...
இவரது ஊர் தெலுங்கானா மாநிலம் மஞ்சிரியாலா மாவட்டத்தில் உள்ள குஸ்னபள்ளி. இவரது உண்மையான பெயர் ஸ்ரீனிவாஸ். 6 ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்த ஸ்ரீனிவாஸூக்கு ஆன்மீகத்தில் நாட்டம் அதிகம். இதனால் கடந்த 15 வருடங்களுக்கு முன்பு திடீரென வீட்டை விட்டு வெளியேறிய ஸ்ரீனிவாஸ், ஆன்மீகத்தில் தன்னை அர்ப்பணித்திருக்கிறார்.
ஆன்மீகத்தில் நாட்டம் உள்ள ஒருவர் சாமியார் ஆவது இயல்பான ஒன்று தான்...ஆனால் ஸ்ரீனிவாஸோ திருநங்கையாக மாறி இறுதியில் அகோரினியாக அவதாரம் எடுத்திருக்கிறார். தனது பெயரையும் நாகசாது என மாற்றிக்கொண்டுள்ளார்.
பொதுவாக அகோரி என்றால் காசியில் தானே இருப்பார்கள் என்று நமக்கு தோன்றலாம்... ஆனால் சமீப காலமாக அகோரிகள் காசியில் இருந்து பல்வேறு மாநிலங்களுக்கு புலம்பெயர்வது வழக்கமாகி விட்டது...
இந்த அகோரியும் அந்த கூட்டத்தில் ஒருவர் தான்... ஸ்ரீனிவாஸாக ஆன்மிகத்தை தேடி சென்றவர் மறுபடியும் நாகசாதுவாக சொந்த ஊருக்கு திரும்பி உள்ளார்.
நீண்ட வருடங்களுக்கு பின் சொந்த ஊருக்கு திரும்பிய ஸ்ரீநிவாசை கண்டு ஊர்மக்கள் திகைத்து போயிருக்கிறார்கள்.
பெற்றோரிடம் ஆசி வாங்கி கொண்ட ஸ்ரீனிவாஸ், சனாதன தர்மத்தை காப்பதற்காக கோவில் கோவிலாக பயணிக்க தொடங்கியிருக்கிறார்.
காரில் காளி தேவியின் ஸ்டிக்கரை ஒட்டிக்கொண்டு, மண்டை ஓடுகளை பண்டல் பண்டலாக பதுக்கி வைத்து, அகோர தெய்வத்தின் சிலைக்கு அமானுஷ்ய பூஜை செய்து, அகிலமெங்கும் பிரவேத்திருக்கிறார்.
மக்களும் அடுத்த காளிதேவியின் அவதாரம் தானோ என நினைத்து நாகசாதுவின் காலில் விழுந்து வணங்கி இருக்கிறார்கள். அப்படி கடந்த சில நாட்களுக்கு முன்னர் மங்களகிரியில் உள்ள ஜன சேனா அலுவலகத்திற்கு வருகை தந்தார் அகோரி நாகசாது. அங்கே அவரது கார் பழுதாகி இருக்கிறது.
இதனால் காரை சர்வீஸ் செய்ய எடுத்துச்சென்றிருக்கிறார்கள். அதுவரை எங்கள் வீட்டில் வேண்டுமானால் தங்கிக்கொள்ளுங்கள் என அகோரியை அழைத்து சென்றிருக்கிறார் அதே ஊரைசேர்ந்த விஷ்ணு என்ற வாலிபர்.
விஷ்ணுவின் குடும்பம் பெரியது... அப்பா அம்மா தம்பி தங்கை என சிறிய வீட்டில் வாழ்ந்து வந்திருக்கிறார்கள். ஆனால் விஷ்ணுவுக்கு அகோரியின் மீது பக்தி அதிகம்... இதனால் அன்று அகோரி இளைப்பார வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அங்கே அவருக்கு ராஜ உபச்சாரம் செய்யப்பட்டிருக்கிறது. அந்த கவனிப்புகள் அகோரிக்கு பிடித்து போக நாகசாது அங்கேயே 15 நாட்கள் டேரா போட்டிருக்கிறார். இந்த அரை மாத கேப்பில் அகோரி செய்த லீலைகள் கொஞ்ச நஞ்சமல்ல...
முதலில் விஷ்ணுவுடன் நெருங்கி பழகிய நாகசாது கட்டிலில் படுத்திருந்த சீடனுக்கு முத்தம் மழை பொழிந்த வீடியோ வைரலானது....
கட்டில் லீலைகளின் உச்சமாக விஷ்ணுவுக்கு ஒரு கயிறை கழுத்தில் கட்டி அகோரி திருமணம் செய்து கொண்டதாகவும் கூறப்படுகிறது... ஆனால் அடுத்து நடந்த விஷயமே வேறு....
விஷ்ணுவின் கழுத்தில் தாலிகட்டிய பிறகு அகோரியின் பார்வை எல்லாம், விஷ்ணுவின் தங்கை மீது திரும்பி இருக்கிறது... விருந்தாளியை சிறப்பாக கவனித்துக்கொண்ட இளம்பெண்ணிடம் சேட்டையை காட்டி இருக்கிறார் நாகசாது.
ஒருநாள் பரிகாரம் செய்வதாக விஷ்ணுவின் தங்கையை அமர வைத்து மாந்திரீக பூஜையை நடத்தி உள்ளார். அதன் முடிவில் சென்னையில் இருந்து வரவழைத்த மந்திர பொருட்களை இளம்பெண்ணின் கழுத்தில் கட்டி உள்ளார்.
அது வெறும் கயிறு அல்ல... வசிய தாலி....என்று சொல்லப்படுகிறது... அந்த தாலியை கட்டிய பின் அகோரி கூறியதை எல்லாம் தட்டாமல் செய்திருக்கிறார் விஷ்ணுவின் தங்கை. 15 நாட்களுக்கு பின் இளம்பெண்ணை தன்னுடைய மனைவி என்று கூறி பெற்றோரிடம் இருந்து பிரித்து அழைத்து வந்திருக்கிறார்.
மகளை தங்களுடன் அனுப்புமாறு கேட்ட விஷ்ணுவின் பெற்றோரிடம் அகோரி 50 லட்சம் பணம் கேட்டதாக தெரிகிறது. இது தொடர்பாக விஷ்ணுவும் அவரது குடும்பத்தாரும் போலீசில் புகார் அளித்திருக்கிறார்கள். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஆனால் விஷ்ணுவின் தங்கை விருப்பப்பட்டு தான் திருநங்கை அகோரியுடன் சென்றதாக போலீசில் கூறி உள்ளார். மேலும் பல்வேறு ஊடகங்களிலும் இருவரும் ஒன்றாக தோன்றி பேட்டி கொடுத்தும், கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் போட்டோக்களை வெளியிட்டும் தங்களின் காதலின் ஆழத்தை வெளிப்படுத்தி வருகிறார்கள்.
உண்மையில் இருவருக்கும் இடையே இருப்பது ஓரினச்சேர்க்கை காதலா? அல்லது அகோரி நாகசாது கட்டிய வசிய தாலியின் வேலையா? என்பதெல்லாம் போலீசா1ரின் விசாரணைக்கு பிறகே தெரியவரும்.