வீர தீர சூரன் வெளியாக செக் வைத்த நீதிமன்றம்

Update: 2025-03-27 21:17 GMT
வீர தீர சூரன் வெளியாக செக் வைத்த நீதிமன்றம்

சினிமாவிலயே நடிகனாக தொடரலாமா ? அல்லது நாமும் அரசியலில் குதித்து விடலாமா ? என்கிற ஒற்றை கேள்வித்தான் தற்போது உச்ச நடிகர்கள் பலரின் தூக்கத்தை தொலைத்திருக்கிறது.

முன்பெல்லாம் ஸ்டார் நடிகர்களின் திரைப்படங்கள் வெளியாகும் போது திரையரங்குகள் விழாகோலம் போல ஜே ஜே என காட்சியளிக்கும்.

First Day First Show வில் அஸ்தான நாயகனின் தரிசணத்தை பெற வேண்டுமென ரசிகர்கள் மத்தியிலும் மிகப்பெரிய Craze இருந்தது.

ஆனால், இன்றைய சூழலில் படவெளியிட்டின் முதல் நாளிலயே திரையரங்குகள் லாக்டவுண் போல வெறிச்சோடி கிடப்பது திரைதுறையினரை அதிர வைத்திருக்கிறது.

இந்த சூழலில் தான் நடிகர் விக்ரமின் வீர தீர சூரன் திரைப்படம் இன்று வெளியாகுமென அறிவிக்கபட்டு அதற்கான புக்கிங்கும் தொடங்கிய நிலையில் திடீரென டெல்லி உயர்நீதிமன்றம் படவெளியிட்டிற்கு தடை விதித்துள்ளது.

வீர தீர சூரனுக்கு முட்டுக்கடை போட்டவர் யார் ? அதன்பின்னணி என்ன ? என்பதை கண்டறிய விசாரணையில் களமிறங்கினோம்.

விக்ரம், S.j Suryah, சித்திக், Dushara Vijayan உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள வீர தீர சூரன் திரைப்படம் மார்ச் 27 ம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டிருந்தது.

சித்தா படத்தின் மூலம் கமெர்ஷியல் ஹிட் கொடுத்த இயக்குனர் அருண்குமார் இந்த திரைப்படத்தை முழு நீள ஆக்ஷன் படமாக உருவாக்கி இருந்தார்.

வழக்கமாக திரைப்படத்தின் முதல் பாகம் வெளியான பிறகு தான் அதன் 2ம் பாகம் வெளியாகும். ஆனால், இயக்குனர் அருண்குமாரும், படக்குழுவினரும் கொஞ்சம் உல்டாவாக வீர தீர சூரனின் இரண்டாம் பாகத்தை முதலில் வெளியிட்டுவிட்டு அதன் பிறகு முதல் பாகத்தை வெளியிட திட்டமிட்டு இருக்கிறார்கள்.

டீஸர் மற்றும் ட்ரைய்லருக்கு ரசிகர்களிடமிருந்து கிடைத்த பாசிடீவ் ரெஸ்பான்ஸை தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே புரோமஷனிலும், பப்ளிசிட்டி ஈவென்டீலும் படக்குழுவினர் முழுவீச்சில் இறங்கி இருந்தனர்.

இந்த சூழலில் தான் மும்பையை சேர்ந்த B4U என்கிற பொழுதுப்போக்கு நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்திருக்கிறது.

அதில், வீர தீர சூரன் திரைபடத்தில் தங்களுடைய நிறுவனம் கோடிக்கணக்கான பணத்தை முதலீடு செய்துள்ளதாகவும், அதன் ஓடீடீ வியாபாரம் மூலம் கிடைக்ககூடிய பணத்தை தயாரிப்பாளர்கள் தங்களுக்கு தருவதாக அக்ரிமென்ட் போட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

அதன்படி ஓடீடீ உரிமத்தை விற்பனை செய்யக்கூடிய அதிகாரம் B4U நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது.

இந்த சூழலில் சம்பந்தப்பட்ட நிறுவனம் ஓடீடீ பிஸினஸை சக்ஸஸ்ஃபுல்லாக பேசி முடிப்பதற்குள் தயாரிப்பாளர் தரப்பினர் படவெளியிட்டு தேதியை அறிவித்து தியேட்டர் ஏரியா உரிமத்தையும் Distributor-களுக்கு கொடுத்திருக்கிறார்கள்.

ஒருவேளை, வீர தீர சூரன் திரைப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் தோல்விபடமாக மாறினால் தங்களுடைய ஓடீடீ பிஸினஸ் பெரியளவில் பாதிக்கப்படுமென B4U நிறுவனம் தயாரிப்பாளர்களிடம் முறையிட்டுள்ளனர்.

ஓடீடீ நிறுவனங்கள் ஓநாய்களை போல கெட்டிக்காரர்கள் என்பதை புரிந்துக்கொண்ட தயாரிப்பாளர் தரப்பினர் ஓடீடீ பிஸினஸின் சூட்சமத்தை புரிந்துக்கொண்டு யதார்த்தத்தை முதலீடு செய்த B4U நிறுவனத்திற்கு விளக்கியதாக கூறப்படுகிறது.

இதனை ஏற்றுக்கொள்ள மறுத்த B4U நிறுவனம் டெல்லி உயர்நீதிமன்றத்தில் படத்தின் ஓடீடீ உரிமத்தை விற்பனை செய்யும்வரை தியேட்டர் ரீலிஸுக்கு தடை விதிக்க வேண்டுமென வழக்கு தொடர்ந்துள்ளனர். இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி மார்ச் 27 ம் தேதி காலை 10.30 மணி வரை பட வெளியிட்டிற்கு இடைக்கால தடை விதித்தார்.

ரீலிஸுக்கு முன்பு இரு தரப்பினரும் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொள்வார்கள் என்றே பலரும் எதிர்பார்த்தனர்.

ஆனால், இன்று காலை வரை அது நடக்கவில்லை, அதன்காரணமாக நீதிமன்ற உத்தரவை ஏற்று வீர தீர சூரன் திரைப்படத்தின் காலை 9 மணி ஸ்பெஷல் காட்சிகளை திரையரங்குகள் ரத்து செய்து. முன்பதிவு செய்தவர்களுக்கு டிக்கெட் பணத்தையும் முழுவதுமாக Refund செய்வதாக அறிவித்தனர். முதல் நாள் முதல் காட்சியில் படம் பார்க்க வேண்டுமென ஆவலோடு காத்திருந்த சீயான் ஃபேன்ஸ் மிகுந்த ஏமாற்றமடைந்திருக்கிறார்கள்.

இந்நிலையில் இன்று மதியம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மீண்டும் இந்த வழக்கு விசாரணைக்கு வந்திருக்கிறது. அப்போது இரண்டு தரப்பினரும் பிரச்சனையை சுமூகமாக பேசி தீர்த்துக்கொண்டதை தொடர்ந்து இன்று மாலை வீர தீர சூரன் திரைப்படம் தடைகளை கடந்து ஒருவழியாக ரீலிஸ் ஆகியுள்ளது. ஆனால், படக்குழுவினர் எதிர்பார்த்த அளவிற்கு ரசிகர்கள் திரையரங்கிற்கு படம்பார்க்க வராதது ஏமாற்றம் அளித்திருக்கிறது.

வீர தீர சூரன் மட்டுமின்றி இன்று ரிலீசான பேன் இந்தியன் திரைப்படமான L2 : எம்புரான் திரைப்படத்திற்கும் ஓப்பனிங்க் பெரிதாக இல்லாதது தற்போது திரைதுறையினரை கதி கலங்க வைத்துள்ளது. புரோமஷனுக்காக பல கோடிகளை செலவழித்தும் புக்கிங்கில் சில லட்சம் கூட திரும்பாதது சினி இன்டஸ்ட்ரியே ஒட்டுமொத்தமாக மந்தநிலையில் இருப்பதை உணர்த்துவதாக உள்ளது. ட்ராகன், குடும்பஸ்தன் போன்ற ஒன்றிரண்டு வெற்றி படங்களை நம்பி எப்படி இனி கோடிக்கணக்கில் பணத்தை முதலீடு செய்வதென புரியாமல் தயாரிப்பாளர்களும் குழம்பி போயுள்ளனர்.

கோலிவுட் மட்டுமின்றி சமீபகாலமாக மல்லுவுட், டொலிவுட், பாலிவுட் என அனைத்து ஃபிலிம் இன்டஸ்ட்ரியினரும் மிகபெரிய நஷ்டத்தை சந்தித்துக்கொண்டிருப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் ரிப்போர்ட் தெரிவிக்கிறது.

இளைஞர்கள் டிஜிட்டல் மீடியாவிலயே அதிகளவில் நேரம் செலவிடுவதாலும், எப்படியும் படம் ஓரிரு வாரத்தில் ஓடீடீக்கு வந்துவிடுமென என்கிற மைன்ட்செட்டிலும் தான் ஆடியென்ஸ் திரையரங்குகளுக்கு படையெடுக்க தயக்கம் காட்டுவதாக சொல்லப்படுகிறது.

அதுமட்டுமின்றி, உச்ச நடிகர்கள் தேர்வு செய்யும் படத்தின் கதைகளும் வலுவாக இல்லை, அதன் திரைக்கதையும் சுவாரஸ்யமாக இல்லை என்பது ஆடியென்ஸ் முன் வைக்கக்கூடிய குற்றச்சாட்டாக உள்ளது.

முன்பெல்லாம் உச்ச நடிகர்களின் படங்களை பட்ஜெட்டீன் பாதி விலைக்கு வாங்க தயாராக இருந்த ஓடீடீ நிறுவனங்கள் தற்போது தியேட்டரை போலவே Pay Per View முறையில் டீல் பேசி முடிப்பதாகவும், ஒருவேளை திரையரங்கில் படம் வெற்றிக்கரமாக ஓடினால் கூட மக்கள் தியேட்டரில் பார்த்த படத்தை இனி யார் ஓடீடீயில் பார்க்க போகிறார்கள்? என குண்டக்க மண்டக்க பேசிவருதாகவும் தயாரிப்பாளர்கள் புலம்பி கொண்டிருக்கிறார்கள்.

ஓடீடீ பிசினஸ் திரைதுறையினருக்கு வரம்மாக பார்க்கப்பட்ட காலம் மாறி தற்போது அதுவே இன்டஸ்ட்ரியின் மிகப்பெரிய வீழ்ச்சிக்கும் காரணமாகிவிட்டதென திரைப்பட தயாரிப்பாளர்கள் குமுறுகிறார்கள்.

எனினும், காலம் மாறும் இந்த காட்சிகள் மாறும் என்கிற நம்பிக்கையில் இன்றும் லைட் கேமிரா ஆக்ஷன் தொடர்ந்துக்கொண்டே தான் இருக்கிறது.

கேமிரா முன்பு மட்டுமில்லாமல் வாழ்க்கை எனும் நாடக மேடையில் திரைத்துறையை சார்ந்த கலைஞர்களும் தொழிலாளர்களும் தினமும் அவர்களது பெஸ்ட் பெர்ஃபார்மன்ஸை கொடுத்து கொண்டே இருக்கிறார்கள். இவர்களின் விடாமுயற்சிக்கான பலன் ஒருநாள் நிச்சயமாக கிடைக்குமென நாமும் நம்புவோமாக.

Tags:    

மேலும் செய்திகள்