சென்னையில் தெரியாத சந்திர கிரகணம் - இது தான் காரணமாம்? | Chennai | Lunar Eclipse | Birla Planetarium
சென்னையில் தெரியாத சந்திர கிரகணம் - இது தான் காரணமாம்..?
சந்திர கிரகணம், இந்தியாவில் பிற்பகல் 2:39 மணிக்குத் தொடங்கி 6:19 மணிக்கு நிறைவடைந்தது. இதில், முழு சந்திர கிரகணம் 3:46 மணியிலிருந்து 5:11 மணி வரை நடந்தது. அந்த நேரத்தில் நிலவு செந்நிறமாக மாறியது. சென்னையில் மழை பெய்ததால் சந்திர கிரகணத்தை சரியாக பார்க்க முடியாத சூழல் காணப்பட்டது. சென்னையில் உள்ள பிர்லோ கோளரங்கத்துக்கு கிரகணத்தைப் பார்க்க வந்தவர்கள், தொலைக்காட்சி வழியாக பார்த்தனர்.