"முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு..." - சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவிப்பு
முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் கார்டு அடையாள அட்டை வழங்கப்படும் என, சட்டப்பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்துள்ளார். மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதத்தில் பேசிய அதிமுக உறுப்பினர் அருண்மொழிவர்மன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் அடையாள அட்டை பெரிதாக இருப்பதால், சட்டமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படுவது போல் ஸ்மார்ட் கார்டு வழங்க வேண்டும் என வலியுறுத்தினார். இதற்கு பதிலளித்த பேரவைத்தலைவர் அப்பாவு, முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் ஸ்மார்ட் அடையாள அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். நீட் தேர்வு விவகாரத்தில் கடலூர் மாணவி நிஷா தற்கொலை
செய்தது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்திற்கு கடிதம் வழங்கியும் எடுத்துக்கொள்ளவில்லை என அ.தி.மு.க உறுப்பினர் தெரிவித்தார். இதற்கு பதிலளித்த சபாநாயகர், தீர்மானம் குறித்து கடிதம் அளித்துள்ள அனைத்து உறுப்பினர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக பதில் நிச்சயம் வரும் என தெரிவித்தார்.