ஒரே பைக்கில் சென்ற மூன்று இளம்பெண்கள்... எமனாக வந்து மோதிய தனியார் பேருந்து - பதைபதைக்கும் சிசிடிவி

Update: 2023-05-10 12:38 GMT

திருநெல்வேலி மாவட்டம் அம்பையில், தனியார் மினி பேருந்தின் சக்கரம் ஏறியதில் இளம்பெண் உயிரிழந்தார். அடையக்கருங்குளம் பகுதியை சேர்ந்த ரம்யா உள்பட மூன்று பெண்கள், அம்பையில் இருந்து வீட்டுக்கு இருசக்கர வாகனத்தில் சென்றனர். அப்போது, பின்னால் வந்த தனியார் மினி பேருந்து, இருசக்கர வாகனம் மீது மோதியது. இதில், நிலைதடுமாறி மூவரும் கீழே விழுந்த நிலையில், ரம்யா மீது பேருந்தின் சக்கரம் ஏறியது. உடனடியாக அவரை மீட்டு, திருநெல்வேலி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், வழியிலேயே உயிரிழந்தார். இது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்