"இது என் இடம்.. விடமாட்டேன்.." - புதைக்க தோண்டிய குழியில் படுத்துக்கொண்ட நபரால் பரபரப்பு

Update: 2023-04-21 12:45 GMT

தூத்துக்குடி மாவட்டத்தில் உயிரிழந்த முதியவரின் உடலை புதைக்க எதிர்ப்பு தெரிவித்த நபர், குழியில் படுத்துக்கொண்டு போராட்டம் நடத்தியதால் பரபரப்பானது.

"இது என் இடம்.. விடமாட்டேன்.." - புதைக்க தோண்டிய குழியில் படுத்துக்கொண்ட நபரால் பரபரப்புதூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரம் அருகேயுள்ள பச்சை பெருமாள் புரத்தினை சேர்ந்தவர் முதியவர் அப்பாவு. இவர் உடல் நலம் குன்றி உயிரிழந்த நிலையில், முதியவரின் உடலை புதைப்பதற்காக உறவினர்கள் எடுத்து சென்றுள்ளனர். அப்போது, அங்கு வந்த செல்லம்குளத்தினை சேர்ந்த மாரியப்பன் என்பவர், முதியவரை புதைக்க உள்ள இடம் தன்னுடையது என்றும், சடலத்தை புதைக்க கூடாது என்றும் தகராறில் ஈடுபட்டார். இதில், திடீரென குழியினுள் இறங்கி படுத்துக்கொண்டு மாரியப்பன் தகராறு செய்தது பரபரப்பை ஏற்படுத்தியது. தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் வருவாய் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, மாரியப்பனிடம் நிலத்திற்கான உரிய ஆவணம் இல்லாத நிலையில், முதியவரின் உடல் புதைக்கப்பட்டு இறுதி சடங்குகள் செய்யப்பட்டது....

Tags:    

மேலும் செய்திகள்