எச்சரித்தும் சரளமாய் ஓடிய சரக்குகள்.. கடற்கரைக்கு செல்ல முடியாமல் மக்கள் தவிப்பு

Update: 2023-02-06 05:25 GMT

சென்னையில் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட நிலையிலும், கள்ள சந்தையில் மதுவிற்பனை களை கட்டியது.

வள்ளலார் நினைவு தினத்தையொட்டி சென்னையில் மதுக்கடைகள் பார்கள் செயல்படாது என அறிவித்த மாவட்ட ஆட்சியர், மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.

இந்நிலையில் திருவெற்றியூர் கன்னிக்கோயில் அருகே கள்ள சந்தையில் மதுவிற்பனை அமோகமாக நடைபெற்றது. இருமடங்கு விலையில் விற்கப்பட்ட மதுவை, வரிசைக்கட்டி வாங்கிய மதுப்பிரியர்கள், கடற்கரை மணல் பரப்பில் அமர்ந்து குடித்தனர்.

இதனால், ஞாயிற்றுக்கிழமையில் கடற்கரைக்கு செல்ல‌ ஆர்வத்துடன் சென்ற பொதுமக்கள், அச்சத்துடன் திரும்பிச் சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்