முதன் முறையாக ஏர்போர்ட்டில் தியேட்டர்.. இந்தியாவிலே சென்னையில் தான் ஃபர்ஸ்ட்..! இனி ஏர்போர்ட்டில் நல்ல டைம்பாஸ்

Update: 2023-02-03 08:59 GMT

 விமான நிலையத்தில் காத்திருக்கும் பயணிகளும் சரி... தங்கள் உறவுகளை வரவேற்க ஆசை ஆசையாக விமான நிலையம் வந்து காத்திருப்பவர்களும் சரி.. சில நேரங்களில் விமானம் தாமதமானால் பல மணி நேரம் காத்து கிடக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்படுவதுண்டு.

இப்படி காத்திருப்புக்கு ஆளாவதை தடுக்கவே...விமான நிலையத்தில் பயணிகளின் பொழுதுபோக்கிற்காக திறக்கப் பட்டிருக்கும் திரையரங்கு தான் இது.

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பிவிஆர் சினிமாஸின் புதிய கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே விமான நிலையம் ஒன்றில் திரையரங்கு திறக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறை.

இது முற்றிலும் விமான பயணிகளுக்கானது மட்டும் தானா ? என்று கேட்டால் அது தான் இல்லை... விமான நிலைய நுழைவு பகுதிக்கு அருகே உள்ள இந்த திரையரங்கில் சாதாரண பொதுமக்களும் சென்று படம் பார்க்கலாம்.

கடந்த ஆண்டு விமான நிலையத்தில் சுமார் 250 கோடி மதிப்பீட்டில் ரெடியான மல்டிலெவல் கார் பார்க்கிங், வணிக வளாகம் தான் இதனை சாத்தியப்படுத்தியிருக்கிறது. இங்கு சுமார் இரண்டாயிரத்து நூறு கார்களை நிறுத்தக்கூடிய வசதி செய்யப்பட்டுள்ளது.

5 திரைகள் கொண்ட இந்த திரையரங்கங்களில் ஒரே நேரத்தில் ஆயிரம் பேர் படம் பார்க்கலாம்.

திரையரங்கு உள்ள வளாகத்தில் விரைவில் கடைகள், உணவகங்கள் போன்ற பொழுதுபோக்குடன் கூடிய மால் போல் மாற்றப்பட உள்ளது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து பயணிப்பவர்கள் புதிதாக கட்டப்பட்ட இணைப்பு பாலம் வழியாக இந்த திரையரங்கை அடையலாம்.

டிக்கெட்கள் ஆன்-லைனில் முன் பதிவு செய்யலாம். திரையரங்க கவுண்டர்களிலும் டிக்கெட் பெறலாம். இது முற்றிலும் தமிழ்நாடு அரசின் கட்டுபாட்டில் வரும். கட்டணத்தை பொறுத்தவரை மற்ற மால்களில் வசூலிக் கப்படும் அதே கட்டணம் தான்.

இதன் மூலம் இனி விமான நிலையத்தில் பல மணி நேரம் காத்து கிடக்க நேரிடும் பயணிகளுக்கு மட்டுமின்றி மக்களுக்கும் இந்த திரையரங்கு சிறந்த பொழுதுப்போக்கு இடமாக இருக்கும்.

திரைப்படம் திரையிடப்படும் நேரங்கள் குறித்த தகவல்களை மட்டுமின்றி, விமான நேரம் குறித்த தகவல்களும் மாலில் உள்ள பலகைகளில் இடம்பெற்று இருக்கும்.

அதே நேரம் ரஜினி, விஜய், அஜீத் என நட்சத்திர நாயகர்களின் திரைப்படங்கள் இங்கே ரிலீஸ் செய்யும் போது தேவையில் லாத கூட்ட நெரிசல் ஏற்பட்டு விமான பயணிகள் சிரமத்திற்கு ஆளாக நேரிடும் என்ற கருத்தும் ஒலிக்கத்தொடங்கியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்