காதலியை சிறை வைத்த பெற்றோர்... கதறிய இளைஞர் - அதிரடியாக மீட்டு காதலனுடன் அனுப்பி வைத்த போலீசார்
நெல்லையில் தான் காதலிக்கும் பெண்ணை, அவர்களது பெற்றோர் வீட்டு காவலில் வைத்ததால் போலீசில் சென்று புகாரளித்து இளைஞர் ஒருவர் பெண்ணை மீட்ட சம்பவம் நடந்துள்ளது.
நெல்லையை சேர்ந்தவர் அந்தோணி சுமிதா. இவர் சென்னையில் உள்ள ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்து வந்துள்ளார். அப்போது அங்கு பணிபுரிந்த சேலத்தை சேர்ந்த பார்த்தசாரதி உடன் காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் காதலித்து வந்த நிலையில், பார்த்தசாரதி பணிமாறுதலாக மும்பைக்கு சென்றுவிட்டார். இந்நிலையில், இருவரும் செல்போன் மூலம் காதலித்து வந்துள்ளனர். இதையறிந்த சுமிதாவின் பெற்றோர்கள் காதலை ஏற்க மறுத்து உறவினர் ஒருவரின் வீட்டில் அவரை வீட்டு காவலில் வைத்துள்ளனர். இதனை, பார்த்த சாரதியிடம் சுமிதா தெரிவிக்க, பார்த்தசாரதி தன் காதலியை மீட்டு தரும்படி போலீசில் புகாரளித்துள்ளார். இதனை போலீசார் விசாரணை நடத்திய போது சுமிதா பார்த்த சாரதியை கரம் பிடிப்பதில் உறுதியாக இருந்ததால் போலீசார் காதலனுடன் சுமிதாவை அனுப்பி வைத்தனர்.