அம்மா ஓட்டலில் பூட்டை உடைத்து கைவரிசை...சமையல் பாத்திரங்களும் திருடு போனதால் பரபரப்பு

Update: 2022-12-18 02:00 GMT

சென்னை கே.கே.நகரில் அம்மா உணவகத்தின் பூட்டை உடைத்து பணம் மற்றும் சமையல் பாத்திரங்களை திருடிச் சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கே.கே.நகர் சிவலிங்கபுரத்தில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் 250க்கும் மேற்பட்டோர் உணவருந்தி வருகின்றனர்.

இந்நிலையில், நேற்று இரவு இந்த அம்மா உணவகத்தின் உள்ளே புகுந்த நபர்கள், கல்லா பெட்டியில் இருந்த ஆயிரத்து 500 ரூபாய் பணம் மற்றும் சமையல் பாத்திரங்களை திருடிச் சென்ற நிலையில், இது குறித்த புகாரின் பேரில்போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்