மீண்டும் வருகிறார் முத்துவேல் பாண்டியன் - 'ஜெயிலர்-2' அறிவிப்பு

x
  • ரஜினிகாந்த்தின் ஜெயிலர் படத்தின் இரண்டாவது பாகம் உருவாகும் என்பதை படக்குழு டீசருடன் அறிவித்துள்ளது.
  • நெல்சன் இயக்கத்தில் அனிருத் இசையில் 2023ம் ஆண்டு வெளியான ஜெயிலர் படம் வசூல் சாதனை படைத்தது. ரஜினிகாந்தின் மாஸ் காட்சிகளை ரசிகர்கள் கொண்டாடி தீர்த்தனர். படம் வெளியான சில மாதங்களில் படத்தின் இரண்டாம் பாகம் உருவாகும் என கூறப்பட்ட நிலையில், படக்குழு அமைதி காத்து வந்தது. இந்த சூழலில், பொங்கலை முன்னிட்டு சூப்பர் அறிவிப்பு உள்ளதாக எதிர்பார்ப்பை எகிற வைத்த தயாரிப்பு நிறுவனம், தைப்பொங்கல் தினத்தில் மாலை 6 மணிக்கு படத்தின் இரண்டாவது பாகம் உருவாக உள்ளதாக டீசருடன் அறிவிப்பு வெளியிட்டது. முதல் பாகத்தில் மிகுந்த வரவேற்பை பெற்ற ஹுக்கும் பாடலுடன் ரஜினிகாந்த் வரும் டீசர் ரசிகர்கள் கவனத்தை ஈர்த்துள்ளது.

Next Story

மேலும் செய்திகள்