விடாமல் பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் கிரிவலம் சென்ற லட்சக்கணக்கான பக்தர்கள்
மார்கழி மாத பௌர்ணமியை ஒட்டி திருவண்ணாமலையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றனர்... அவ்வப்போது பெய்த மழையையும் பொருட்படுத்தாமல் தமிழ்நாடு மட்டுமல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்களும் அண்ணாமலையார் கோவிலில் சாமி தரிசனம் செய்து 14 கிலோ மீட்டர் கொண்ட கிரிவலப் பாதையில் கிரிவலம் கொண்டனர்.