``விளையாடுனது போதும் டாடி மேல வந்துரு''.. தந்தை உயிர் போனது தெரியாமல் வீடியோ எடுத்த குழந்தைகள்

Update: 2025-01-14 17:10 GMT

தஞ்சாவூர் மாவட்டம் மேல உளூர் பகுதியை சேர்ந்தவர் சவுந்தரராஜன், தனது இரண்டு பெண் குழந்தைகளுடன் அப்பகுதியில் உள்ள கல்யாண ஓடையில் குளிக்க சென்றுள்ளார். குழந்தைகள் இருவரையும் கரையில் நிறுத்திவிட்டு, ஓடையில் குதித்த சவுந்தரராஜன், நீரின் வேகத்தில் அடித்து செல்லப்பட்டார். இதனை அறியாத அவரது குழந்தைகள், செல்போனில் வீடியோ எடுத்தபடியே விளையாடிக் கொண்டிருந்துள்ளனர். அவர் நீண்ட தூரம் சென்றதால் அதிர்ச்சி அடைந்த குழந்தைகள், “போதும் டாடி வந்துரு“ என கூச்சலிட்டனர். ஆனால், சவுந்தரராஜன் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது குழந்தைகள் செல்போனில் எடுத்த காட்சிகள் வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்