மேயர் கேட்ட கேள்வியால் கண்ணீர் விட்டு அழுத துணை மேயர் மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு | DMK | Congress
மேயர் கேட்ட கேள்வியால் கண்ணீர் விட்டு அழுத துணை மேயர்.. மாமன்ற கூட்டத்தில் பரபரப்பு கும்பகோணத்தில் நடைபெற்ற மாநகராட்சி கூட்டத்தில், மேயர் சரவணன் எழுப்பிய கேள்விக்கு துண மேயர் தமிழழகன் கண்ணீர் சிந்த பதிலளித்தார். இந்தக் கூட்டத்தில், தான் மாநகராட்சி மேயராக பதவி வகிக்கும் போது, துணை மேயரை செயல் வீரர் எனக் குறிப்பிட்டு சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளதால், தனது பதவிக்கு களங்கம் ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு திமுக மாமன்ற உறுப்பினர்கள் பதிலளிக்க வேண்டும் எனவும் மேயர் சரவணன் கூறினார். இதற்கு துணை மேயர் தமிழழகன் பதிலளிக்கையில், மாநகராட்சி மேயர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது தொடர்பாக, தன் மீது வருத்தம் ஏதாவது உள்ளதா என முதலமைச்சர் ஸ்டாலின் தன்னிடம் கேட்டதாகவும், அந்த வார்த்தை ஒன்றே போதும் எனவும் துணை மேயர் தமிழழகன் கண்ணீருடன் தெரிவித்தார்.