மீம்ஸ் பேனரை காட்டிய பாஜக கவுன்சிலர்... திடீரென டென்ஷன் ஆன திமுக கவுன்சிலர்கள்

Update: 2023-03-15 14:23 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், தனது வார்டுக்கு நிதி ஒதுக்காத‌தைக் கண்டித்து மீம்ஸ் பேனர் காட்டிய பாஜக கவுன்சிலருடன் திமுக கவுன்சிலர்கள் வாக்குவாத‌த்தில் ஈடுபட்டனர். ஆம்பூர் நகர மன்ற கூட்டத்தில், பேசிய 27 வது வார்டு பாஜக கவுன்சிலர் ஹர்ஷா ரெட்டி, தனது வார்டில் எந்த பணிகளும் செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டினார். மேலும், தான் கொண்டு வந்த, வடிவேலு படம் அச்சிட்ட மீம்ஸ் பேனரையும் காட்டி பேசினார். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த திமுக கவுன்சிலர்கள், ஹர்ஷா ரெட்டியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அப்போது, பாஜக கவுன்சிலருக்கு, அதிமுக கவுன்சிலர்களும் ஆதரவு தெரிவித்தால், கவுன்சிலர்களுக்குள் தள்ளுமுள்ளு ஏற்பட்டது

Tags:    

மேலும் செய்திகள்