கள்ளக்காதலில் கர்ப்பம் கணவனுக்கு வந்த சந்தேகம்...பச்சிளங்குழந்தையை ஏரியில் வீசிகொன்ற தாய்....
சென்னை - வேளச்சேரி
கள்ளக்காதலில் கர்ப்பம்... கணவனுக்கு வந்த சந்தேகம்...
பச்சிளங்குழந்தையை ஏரியில் வீசிகொன்ற தாய்....
பாத்ரூமில் பிரசவம்...ஏரியில் மிதந்த குழந்தை...
தகாத உறவில் பிறந்ததால் கொன்ற தாய்...
சென்னை வேளச்சேரி ஏரிக்கரை பகுதி.... சாலையை ஒட்டி காட்சியளிக்கும் இந்த பசுமையில் தான் அந்த படுபயங்கரமும் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது.
பிறந்து இரண்டு நாட்களேயான ஒரு பச்சிளம் பெண் குழந்தை எரியில் சடலமாக கிடந்திருக்கிறது.
ஓட்டு வீட்டினுள் ஊசலாடிக்கொண்டிருக்கும் இந்த மஞ்சள் புடவை மட்டுமே அதற்கு ஒரே சான்றென அப்போது யாருக்கும் தெரியவில்லை.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார், குழந்தையின் சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விட்டு விசாரனையை தொடங்கி இருக்கிறார்கள்.
ஏரியாவே பரபரப்புடன் காட்சியளிக்க சடலம் கிடந்த அக்கம் பக்கத்து வீட்டினரிடையே நடந்த தீவிர விசாரனையில், அதே பகுதியில் வசித்து வந்த சங்கீதா என்ற பெண் இரண்டு மூன்று நாட்களாக வயிற்று வலியால் துடித்தது தெரியவந்திருக்கிறது.
உடனே சங்கீதாவிடம் நடத்தப்பட்ட கிடுக்குப்பிடி விசாரனையில் 10 மாதம் சுமந்து பெற்ற குழந்தையை ஈவு இரக்கமின்றி தாயே ஏரியில் வீசி கொன்றது வெட்டவெளிச்சமாகி உள்ளது.
அதற்கு காரணம் கள்ளக்காதல்.....
ஆம்.... 22 வயதான சங்கீதா திருமணமானவர். கடந்த சில ஆண்டுகளாக ஏரிக்கரை குடியிருப்பு பகுதியில் உள்ள இந்த வீட்டில் வசித்து வந்திருக்கிறார்.
இந்நிலையில் தான் சங்கீதா குடியிருக்கும் அதே பகுதியில் மளிகைக்கடை வைத்திருக்கும் ஒருவருடன் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. மளிகை பொருட்களை வாங்க சென்ற சங்கீதா, பணத்திற்கு பதில் மனதை பறிகொடுத்திருக்கிறார்.
கணவனுக்கு தெரியாமல் இருவரும் அடிக்கடி கடையை சாத்திவிட்டு ஊரை சுற்றி உல்லாசமாக இருந்து வந்துள்ளனர். அந்த உல்லாச வாழ்க்கைக்கு அடையாளமாக சங்கீதா கருத்தரித்திருக்கிறார்.
அந்த விஷயமே அவருக்கு 3 மாதம் கழித்து தான் தெரிந்திருக்கிறது. உடனே கருவை கலைக்க நினைத்து மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார் சங்கீதா. ஆனால் கரு வளர்ந்து விட்டதால் அந்த முயற்சியும் தோல்வியில் முடிந்திருக்கிறது.
வேறு வழியின்றி கருவை யாருக்கும் தெரியாமல் ரகசியமாக வளர்த்து வந்திருக்கிறார் சங்கீதா. கத்திரிக்காய் முற்றினால் கடைத்தெருவுக்கு வந்துதான் ஆகவேண்டும் என்பதை போல, கரு வளர வளர சங்கீதாவின் வயிறு வீங்கி இருக்கிறது.
"என்ன வயிற்றில் மாற்றம் தெரிகிறது" என கணவன் கேட்ட போது, "சாப்டு சாப்டு தூங்குறதால தொப்ப வந்துடுச்சி" என்று சமாளித்திருக்கிறார் சங்கீதா.
இப்படியாக மாதங்கள் கடக்க, நிறைமாத கர்ப்பிணியான சங்கீதா, கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் கழிவறைக்கு சென்றிருக்கிறார். அப்போது பிரசவ வலி எடுத்து கழிவறையிலேயே ஒரு பெண்குழந்தை பிறந்திருக்கிறது.
தவறான பழக்கத்தில் பிறந்த குழந்தை கணவனுக்கு தெரிந்தால், சங்கீதாவின் சங்கதி முடிந்துவிடும் என நினைத்து அந்த குழந்தையை உலகிற்கே தெரியாமல் அழிக்க நினைத்திருக்கிறார்.
இரவு முழுதும் தூரிகட்டி தலாட்டிய குழந்தையை, நள்ளிரவில் தூக்கி சென்று ஏரியில் வீசி கொடூரமாக கொலை செய்தது விசாரனையில் தெரியவந்திருக்கிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த போலீசார், சங்கீதாவை கைது செய்து, இந்த கொலையில் மளிகைகடைகாரருக்கும் தொடர்பிருக்கிறதா என விசாரனை நடத்தி வருகின்றனர்.