வீடு, கோயிலை காணவில்லை.. - ஜெயிலில் இருந்து காவல் நிலையம் ஓடிய ஜோதிடர்

Update: 2024-11-24 13:16 GMT

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை சேர்ந்த ஜோதிடர் முத்தையன் என்பவருக்கும், வாசுதேவனூரை சேர்ந்த ஆனந்த் என்பவருக்கும் பணம் கொடுக்கல் வாங்கலில் தகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பான புகாரில் முத்தையன் கைதாகி சிறையில் இருந்த நிலையில், அவருக்கு சொந்தமான 7 லட்சம் மதிப்பிலான வீடு, கோயில் உள்ளிட்டவை இடித்து தரைமட்டமாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. சிறையில் இருந்து வெளியே வந்த முத்தையன், வீடு கோயில் இடிக்கப்பட்டதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுதொடர்பாக அவர் புகாரளித்த நிலையில், ஆனந்த்தை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்