"அதானியை காப்பாற்ற போட்டியிடுவதா?" - ஆவேசமாக பேசிய சீமான்

Update: 2024-11-24 13:02 GMT

அதானியை காப்பாற்ற பாஜகவும், திமுகவும் போட்டி போடுவதாக நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்துள்ளார். செல்வந்தர் அதானி மீது அமெரிக்கா அரசு வழக்குப்பதிவு செய்தது நாட்டிற்கே அவமானம் எனவும், அதானி லஞ்சம் கொடுத்ததாக குற்றம்சாட்டப்பட்ட பட்டியலில் தமிழ்நாடு இருப்பது அதிர்ச்சி அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். அதானி மீது நடவடிக்கை எடுக்காமல் நாட்டு மக்களுக்கு பாஜக துரோகம் செய்துள்ளதாக சாடியுள்ள சீமான், அதானிக்கு திமுக அரசு வாசல் திறந்துவிட்டு, தமிழர் நலனை அடகு வைப்பதாக சீமான் குற்றம்சாட்டியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்