தெலங்கானா மாநிலம் சிவம்பேட்டையில் நிதி நிறுவனத்தின் தொல்லையால் பைக்குக்கு தீ வைத்த இளைஞர்
மாதாந்திர தவணை முறையில் பைக்கை வாங்கிய நிலையில், தொடர்ந்து தொல்லை தந்து வந்து தனியார் நிதி நிறுவனம்
நிதி நெருக்காடியால் தவணையை கட்ட தவறிய இளைஞர்
நிதி நிறுவன ஊழியர்கள் இளைஞரின் வீட்டிற்கு சென்று தவணையை செலுத்துமாறு மிரட்டியதாக கூறப்படுகிறது
ஆத்திரமடைந்த இளைஞர், ஊழியர்கள் முன்பே இருசக்கர வாகனத்தை எரித்ததால் பரபரப்பு நிலவியது இஎம்ஐ செலுத்துமாறு மிரட்டியுள்ளனர்.
தெலங்கானாவில் மாநிலத்தில் தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியின் தொல்லை தாங்க முடியாமல், மேடக் மாவட்டம் சிவம்பேட்டையில் இன்றுஇளைஞர் ஒருவர் தனது பைக்கை தீ வைத்து எரித்துள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் தனியார் ஃபைனான்ஸ் கம்பெனியின் தொல்லை தாங்க முடியாமல், மேடக் மாவட்டம் சிவம்பேட்டையில் இன்றுஇளைஞர் ஒருவர் தனது பைக்கை தீ வைத்து எரித்துள்ளார்.
தனியார் நிதி நிறுவனத்தில் கடன் பெற்று மாதாந்திர தவணை முறையில் பைக்கை வாங்கியதாக போலீசார் தெரிவித்தனர்.
பல மாதங்களாக, அவர் தனது மாதாந்திர தவணையை சரியான நேரத்தில் செலுத்தினார். நிதி நெருக்கடி காரணமாக, நிதி நிறுவனத்திற்கு மாதாந்திர தவணையை செலுத்த தவறிவிட்டார்.
நிதி நிறுவனத்தின் ஊழியர்கள் இளைஞரின் வீட்டிற்கு வந்து இஎம்ஐ செலுத்துமாறு மிரட்டியுள்ளனர்.
ஊழியர்களின் நடத்தையால் ஆத்திரமடைந்த அவர், அவர்கள் முன் தனது இருசக்கர வாகனத்தை எரித்ததால் அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவியது.