`திமுகவில் இருந்து தற்காலிக நீக்கம்..' பிரியாணி கொடுத்து கொண்டாடிய கவுன்சிலர்
திமுகவில் இருந்து தற்காலிகமாக நீக்கியதன் ஓராண்டை நெல்லை மாநகராட்சி கவுன்சிலர் கொண்டாடியுள்ளார். நெல்லை மாநகராட்சியின் 6வது வார்டு கவனுசிலராக இருப்பவர் பவுல்ராஜ். திமுக சார்பில் வெற்றி போட்டியிட்டு பெற்ற இவர், தனது வார்டில் பணிகள் சரிவர செய்யப்படவில்லை எனக்கூறி போராட்டம் நடத்திய நிலையில், கடந்த ஆண்டு கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டார். அதன்பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்திருந்தார். இந்நிலையில், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டு ஓராண்டு ஆகியுள்ளதை கொண்டாடும் வகையில், பாளையங்கோட்டை செவித்திறன் குறைபாடு கொண்ட மாணவர்களுக்கான பள்ளியில், பிரியாணி வாங்கிக் கொடுத்து கொண்டாடியுள்ளார். இந்த நாளை, ஒவ்வொரு ஆண்டும் கொண்டாட உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.