சென்னையில் 14 வயது சிறுமியிடம் அத்துமீறிய நபரை தர்ம அடிகொடுத்து போலீஸில் ஒப்படைத்த மக்கள்
சென்னையில், சிறுமியை திரைப்படம் பார்க்க அழைத்து சென்று பாலியல் சீண்டலில் ஈடுபட்ட நபரை போலீசார் கைது செய்தனர். சென்னை ராயப்பேட்டையை சேர்ந்த சுரேஷிடம் கணவர் இறந்த நிலையில் 14 வயது சிறுமியுடன் வீட்டு வேலை செய்து வசித்து வரும் பெணிடம் ஐம்பதாயிரம் ரூபாய் கடன் கேட்டுள்ளார். பண உதவி செய்வதாக வாக்களித்த சுரேஷ், சிறுமிக்கு செருப்பு வாங்கிக்கொடுத்து அழைத்து வருவதாக கூறி திரைப்படம் பார்க்க கூட்டி சென்றுள்ளார். படம் பார்த்தபோது சிறுமியிடம் சுரேஷ் தவறாக நடக்க முயற்சித்த நிலையில் சிறுமி கூச்சலிட்டதால் அருகில் இருந்தவர்கள் அவரை படித்து போலீசில் ஒப்படைத்தனர்.