15 டன் எடை, 23 அடி உயரம்,17 அடி அகலம் - பிரமிக்க வைக்கும் உலகின் பிரமாண்ட நடராஜர் சிலை - இனி பொது மக்களும் தரிசிக்கலாம்
15 டன் எடை, 23 அடி உயரம்,17 அடி அகலம் - பிரமிக்க வைக்கும் உலகின் பிரமாண்ட நடராஜர் சிலை - இனி பொது மக்களும் தரிசிக்கலாம்
வேலூர் தங்க கோயில் வளாகத்தில் நிறுவப்பட்டுள்ள உலகிலேயே மிகப்பெரிய ஐம்பொன்னால் ஆன நடராஜர் சிலை பொதுமக்கள் பார்வைக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. 23 அடி உயரம், 17 அடி அகலம், 15 டன் எடை கொண்ட பிரமாண்ட நடராஜர் சிலை கடந்த 2012 ஆம் ஆண்டு முதல் கும்பகோணத்தில் வடிவமைக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், தங்க கோயில் வளாகத்தில் தற்காலிக நிறுவப்பட்டுள்ள நடராஜர் சிலையை, தங்ககோயில் நிறுவனர் சக்தியம்மா திறந்து வைத்தார். மேலும், நடராஜருக்கு தனி ஆலயம் அமைத்து பிரதிஷ்டை செய்யப்படும் என்றும் அவர், தெரிவித்துள்ளாார்.