பள்ளி மாணவனுக்கு விஷம்; 2 டாக்டர்கள் சஸ்பெண்ட். - மருத்துவர்கள் தர்ணா போராட்டம்
காரைக்காலில் அரசு மருத்துவமனை வளாகத்தில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். காரைக்காலில் தனியார் பள்ளியில் படித்து வந்த 8-ம் வகுப்பு மாணவன் உயிரிழந்த விவகாரத்தில், மருத்துவர்களின் அலட்சிய போக்கே காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது,. இதனை தொடர்ந்து 2 மருத்துவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர். இந்நிலையில் இதனை கண்டித்து காரைக்கால் அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கருப்பு பேஜ் அணிந்து ஒரு மணி நேரம் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களின் போராட்டத்தால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர்.