- பங்குனி உத்திர திருவிழாவையொட்டி, சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று திறக்கப்படுகிறது.
- சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.
- இந்த ஆண்டுக்கான திருவிழா வருகிற 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
- இதனை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது.
- எனினும், பூஜைகள் எதுவும் நடை பெறாது. நாளை கொடியேற்றம் நடைபெறுகிறது.
- ஆன்லைனில் முன் பதிவு செய்த பக்தர்களுக்கு மட்டுமே தரிசனத்திற்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
- விழாவின் இறுதி நாளான ஏப்ரல் 5-ந் தேதி பம்பையில் ஆராட்டு விழா நடைபெறும்.
- அன்று மாலை கொடியிறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவடைகிறது.