"தம்பி.. தம்பி.." கார் டாப்பில்அமர்ந்து கல்லூரி மாணவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் - அடாவடி வீடியோ
மாரம்பள்ளியில் கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் வகையில் கல்லூரியில் இருந்து 40க்கும் மேற்பட்ட வாகனங்களில் கல்லூரி மாணவர்கள் ஊர்வலமாக சென்றுள்ளனர். இதில் ஒரு சில வாகனங்களில் கல்லூரி மாணவர்கள் வாகனத்தில் மேலே ஏறியும் வாகன கதவுகளில் தொங்கிக் கொண்டும் விபத்து ஏற்படுத்தும் வகையிலும் சென்றுள்ளனர். பொதுமக்கள் கொடுத்த புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போக்குவரத்து துறையினர் மூன்று வாகனங்களை பறிமுதல் செய்தனர்.