அரசு மருத்துவமனையில் பக்கெட்டுடன் காத்திருந்த நீண்ட வரிசை - காரணம் என்ன தெரியுமா?
நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் வெந்நீர் தட்டுப்பாடு காரணமாக உணவு விடுதிகளில் நீண்ட வரிசையில் காத்திருந்து நோயாளிகளின் உறவினர்கள் சுடு தண்ணீர் வாங்கி வருகின்றனர். இந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்நிலையில், மருத்துவமனையின் பழைய கட்டிடத்தில் சோலார் பேனல் மூலம் சுடுதண்ணீர் விநியோகிக்கும் பணியானது அனைத்து வார்டுகளிலும் நடந்து வருவதாகவும், நோயாளிகளின் தேவைக்காக அனைத்து வார்டுகளிலும் குளிப்பதற்கும் குடிப்பதற்கும் தனித்தனியாக சுடுதண்ணீர் வழங்கப்படுவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.