நெருங்கும் ராஜஸ்தான் சட்டமன்ற தேர்தல்.. ஓயாத சச்சின் Vs கெலாட் பஞ்சாயத்து

Update: 2023-04-10 01:39 GMT

ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் முதலமைச்சர் அசோக் கெலாட்டிற்கு எதிராக துணை முதலமைச்சர் சச்சின் பைலட் திரும்பியிருப்பது, ராஜஸ்தான் காங்கிரஸ் கட்சிக்குள் மீண்டும் உட்கட்சி பூசலை தலைதூக்க வைத்துள்ளது.

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட் மற்றும் துணை முதலமைச்சர் சச்சின் பைலட்டிற்கு இடையே சுமூகமான உறவு இல்லை. இருவரும் பொதுவெளியில் தங்களின் மனகசப்பை வெளிப்படுத்தி வருவதும், ஆளும் சொந்த கட்சியான காங்கிரஸ் அரசுக்கு எதிராக துணை முதல்வர் சச்சின் பைலட் போர்க்கொடி தூக்குவதும் தொடர்கதையாகி வருகிறது. இந்நிலையில், இம்முறை முன்னாள் ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே ஆட்சி காலத்தில் உள்ள ஊழல் குற்றச்சாட்டுகள் மீது கெலாட் அரசு இன்னும் நடவடிக்கை எடுக்காதது ஏன்? என சச்சின் பைலட் கேள்வி எழுப்பியுள்ளார். பல முறை புகார் அளித்தும், அவற்றிற்கு அசோக் கெலாட் பதிலளிக்க மறுப்பதாகவும் அவர் குற்றம்சாட்டியுள்ளார். அதோடு, நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அசோக் கெலாட் அரசுக்கு எதிராக வரும் செவ்வாய் கிழமை ஒரு நாள் உண்ணாவிரதம் இருக்க போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்

Tags:    

மேலும் செய்திகள்