நாய்கள் கடித்ததில் காயமடைந்த மயில்... உடனடியாக முதலுதவி அளித்த பொதுமக்கள்
கோவை அருகே சாலையில் அடிபட்டுக் கிடந்த மயிலை, பொதுமக்கள் மீட்டு வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். கோவை மாவட்டம், வடக்கலூர் பகுதியில் மயில் ஒன்று, நாய்கள் கடித்ததில் காயமடைந்து சாலையோரம் கிடந்துள்ளது. மயிலை மீட்டு முதலுதவி அளித்த பொதுமக்கள், பின்னர் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர்.