ராமாபுரம் மவுன்ட் சாலையில் மெட்ரோ வாட்டர் ஒர்க்-கிண்டியில் திக்குமுக்காடும் வாகன ஓட்டிகள்| ThanthiTV
சென்னை ராமாபுரம் மவுன்ட் சாலையில், மெட்ரோ வாட்டர் பணிகள் நடைபெற்று வருவதால், கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. கிண்டி செல்லக்கூடிய பிரதான சாலையில் ஒரு புறம் தடுப்பு அமைக்கப்பட்டு பள்ளம் தோண்டும் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலை ஒரு வழி பாதையாக மாற்றப்பட்டுள்ளதால், போரூர் - கிண்டி சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு, வாகன ஓட்டிகள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்