தவெகவில் யாருக்கு பதவி? - உறுதியாக சொன்ன ஆனந்த்

Update: 2024-12-22 14:07 GMT

தவெக கட்சியில் உழைப்பவர்களுக்கு வீடு தேடி பதவி வரும் என பொதுச்செயலாளர் ஆனந்த் தெரிவித்துள்ளார். சென்னை கொட்டிவாக்கத்தில் தமிழக வெற்றிகழகம் கட்சி சார்பில் கிறிஸ்துமஸ் தின விழா கொண்டாடப்பட்டது. இதில் தவெக கட்சியின் பொதுச் செயலாளர் ஆனந்த் கலந்துகொண்டு கேக் வெட்டி கொண்டாடினார். தொடர்ந்து பேசிய அவர், கட்சிக்காக உழைப்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் வீட்டில் இருந்தாலும் அழைத்து வந்து அவர்களுக்கு பதவி கொடுப்போம் என்றார். 

Tags:    

மேலும் செய்திகள்