பிரதமர் மோடிக்கு குவைத் நாட்டின் உயரிய விருது வழங்கி கவுரவிப்பு

Update: 2024-12-22 13:50 GMT

அரசு முறை பயணமாக குவைத் சென்றுள்ள பிரதமர் மோடி, குவைத் பிரதமர் ஷேக் அஹ்மத் அப்துல்லாவை சந்தித்தார். முன்னதாக குவைத்தில் உள்ள பயான் அரண்மனையில் பிரதமர் மோடிக்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. தொடர்ந்து, அந்த நாட்டின் உயரிய விருதான ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருதை குவைத்தின் அமீர் ஷேக் மெஷல் வழங்கி கவரவித்தார். பிரதமர் மோடிக்கு ஒரு நாடு அளிக்கும் 20-வது சர்வதேச கெளரவம் இதுவாகும். ஆர்டர் ஆஃப் முபாரக் அல் கபீர் விருது என்பது குவைத்தின் மாவீரர் பட்டமாகும். அரச தலைவர்கள் மற்றும் வெளிநாட்டு அரச குடும்ப உறுப்பினர்களுக்கு நட்பின் அடையாளமாக இந்த விருது வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக, அமெரிக்க அதிபர்கள் பில் கிளிண்டன், ஜார்ஜ் புஷ், இங்கிலாந்து இளவரசர் சார்லஸ் போன்ற வெளிநாட்டு தலைவர்களுக்கு மட்டுமே இந்த விருது வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்