2 பக்கம் மலை குன்றுகள்.. பச்சை பசேல் என வனப்பகுதி... நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவியின் அழகு.!!
MGR Falls Nilgiris
நீலகிரி சுற்றுப்பகுதிகளில் பெய்து வரும் தொடர் மழையால்
முதுமலை வனப்பகுதி நடுவே செல்லக்கூடிய மாயாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்த நீரானது முதுமலை வனப்பகுதி வழியாக பவானிசாகர் அணைக்கு செல்லும் நிலையில், முதுமலை அடர்ந்த வனப்பகுதிக்கு நடுவே எம்.ஜி.ஆர் அருவியில் கொட்டும் இந்த நீர் கண்களுக்கு விருந்தளிக்கும் வகையில் அமைந்துள்ளது. 2 பக்கம் மலை குன்றுகள்... பச்சை பசேல் என வனப்பகுதி... நடுவே ஆர்ப்பரித்து கொட்டும் அருவி என்று இந்த கண்கொள்ளா காட்சியை சுற்றுலாப்பயணிகள் ஆர்வத்துடன் கண்டு ரசித்தனர்