மதுவில் விஷம் கலந்து பூசாரி கொலை... தாய் மாமனுக்கு மருமகன் போட்ட ஸ்கெட்ச்...
மது குடுச்சு இறந்ததா நினச்சுக்கிட்டு இருந்த பூசாரியோட மரணத்துல திடீர் திருப்பமா அது ஒரு திட்டமிட்ட கொலைனு தெரிய வந்திருக்கு.. துக்க வீட்டுக்கு வராத தாய்மாமனு மருமகன் கொடுத்த தண்டனை இது..
மும்முரமாக நடந்துகொண்டிருந்த கோவில் கும்பபிஷேக வேலைகள் திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. ஊருக்குள் நுழைந்த காவல்துறையினர்... காலி மதுபாட்டில்களை சேகரித்து ஆய்வுச் செய்துகொண்டிருந்தனர்.
நண்பர்களுடன் சேர்ந்து டாஸ்மாக்கில் மதுவாங்கி குடித்த கோவில் பூசாரி உடலில் விஷம் ஏறி பரிதாபமாக இறந்துள்ளார்.
ஒருவேளை மதுதான் விஷமாக மாறி பூசாரியின் உயிரை பறித்துள்ளதா என்ற கோணத்தில் போலீசார் விசாரணையை தொடங்கினார்கள்.
அப்போதுதான் பூசாரியுடன் மது அருந்தியவர்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில் பூசாரி திட்டம்போட்டு கொலைச் செய்யப்பட்ட திடிக்கிடும் தகவல் காவல்துறைக்கே டிவிஸ்ட் கொடுத்திருக்கிறது.
மதுரை மாவட்டம் , மேலூர் அடுத்துள்ளது கிடாரிப்பட்டி கிராமம். இதே கிராமத்தைச் சேர்ந்தவர் பனையன். 45 வயதாகிறது. திருமணாமாகி மனைவி மற்றும் இரண்டு மகன்கள் உள்ளனர். உள்ளூரிலேயே இருக்கும் பெரிய நாச்சியம்மன் கோவிலில் பூசாரியாக வேலைப் பார்த்து வந்துள்ளார்.
கோவில் கும்பபிஷேகம் நடத்தவிருப்பதால் பனையன் , பனையனின் அக்கா மகன் வீரணன் மற்றும் நண்பர் கருத்தமொண்டி ஆகிய மூவரும் ஒன்றுசேர்ந்து கோவிலுக்கு பெயின்ட் அடிக்கும் வேலைச் செய்து வந்திருக்கிறார்கள்.
தினமும் கோவில் வேலைகளை முடித்துவிட்டு மூவரும் ஒன்றாக மது அருந்துவது வழக்கம்...
அதேபோல் சம்பவத்தன்றும் மாலை பனையன் மற்றும் அவரது உறவினர்கள் இருவரும் டாஸ்மாக்கில் மதுவாங்கி குடித்திருக்கிறார்கள். போதை தலைக்கேறிய பின்பு வீரணன் மற்றும் கருத்தமொண்டி வீட்டிற்கு சென்றிருக்கிறார்கள்... அப்போதுதான் வீட்டிற்கு சென்ற கருத்தமொண்டி வாந்தி எடுத்து மயக்கமடைந்திருக்கிறார். மேலும் பனையன் மது அருந்திய இடத்திலேயே மூச்சுபேச்சியின்றி கிடந்துள்ளார். இதைப்பார்த்த உறவினர் பாதிப்படைந்த இருவரையும் மீட்டு மருத்துவமனையில் சேர்த்திருக்கிறார்கள்.
அதில் பனையன் மட்டும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்துள்ளார்... பனையன் மரணமடைந்தது காவல்துறைக்கு சந்தேகத்தை கிளப்பியிருக்கிறது. பனையன் இறப்பில் மர்மம் இருப்பதை உணர்ந்து உடற்கூறு ஆய்விற்கு அனுப்பியிருக்கிறார்கள். அப்போதுதான் பனையன் அருந்திய மதுவில் பூச்சுக்கொல்லி மருந்து கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில் பனையனோடு மது அருந்திய வீரணின் உடலில் எந்த பாதிப்பும் ஏற்படாதது காவல்துறையின் சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்கிறது..
வீரணிடம் கெடுக்குபிடி விசாரணை நடத்தியிருக்கிறார்கள். அதில் வீரணன் திட்டம்போட்டு பனையனை தீர்த்துகட்டியது தெரியவந்துள்ளது.
ஆம், சமீபத்தில் வீரணனின் தாய் மரணமடைந்திருக்கிறார். அந்த துக்க நிகழ்ச்சிக்கு கோவிலுக்கு காப்புக்கட்டிய காரணத்தால் பனையனும் அவரது உறவினர்கள் யாரும் வரவில்லை.
மேலும் தாய்மாமன் என்ற முறையிலும் பனையன், அக்கா மகன் வீரணனுக்கு சீர் செய்ய மறுத்ததாக கூறப்படுகிறது.
உள்ளூரிலேயே இருக்கும் தாய்மாமன் சீர் செய்யாமல் புறக்கணித்தது, ஊர்காரர்கள் முன்னிலையில் வீரணனுக்கு அவமானத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கோவில் பூசாரி என்ற கெத்தில் தன்னை அவமானப்படுத்திய பனையனை தீர்த்துகட்ட திட்டம்போட்டிருக்கிறார் வீரணன். அதற்காக சம்பவத்தன்று மதுவில் பூச்சி மருந்து கலந்து பனையனுக்கு தெரியாமல் கொடுத்துள்ளார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவுச் செய்த போலீசார் வீரணனை கைதுச் செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.