மணிப்பூர் விவகாரம் - "எங்களுக்கு எந்த அச்சமும் இல்லை" - ஆவேசமாக பேசிய அமித்ஷா

Update: 2023-07-26 02:09 GMT

மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க அரசுக்கு எந்த அச்சமும் இல்லை என்று, மக்களவையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

மக்களவையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் அமளிக்கிடையே, பல மாநில கூட்டுறவு சொசைட்டி திருத்தம் மசோதா நிறைவேற்றப்பட்டது. இறுதியாக மசோதாவின் மீது மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில்களை வழங்கி கொண்டிருந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் மணிப்பூர் விவகாரத்தை முன்வைத்து கடும் முழக்கங்களை எழுப்பிக் கொண்டிருந்தனர். அப்போது குறுக்கிட்ட அமித்ஷா, அவையில் முழக்கங்களை எழுப்பி கொண்டிருப்பவர்களுக்கு கூட்டுறவு குறித்தோ, ஒத்துழைப்பு குறித்தோ அக்கறை இல்லை என்றார்.

அவர்களுக்கு தலித்துகளின் மீதோ பெண்களின் நலன் இதோ அக்கறை இல்லை என குற்றம் சாட்டினார். மணிப்பூர் விவகாரத்தில் மறைப்பதற்கு எதுவும் இல்லை என தெரிவித்த அமித்ஷா, இது குறித்து விவாதிக்க அரசுக்கு எந்தவிதமான அச்சமும் இல்லை என குறிப்பிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்