"மக்களின் உரிமைகள் மீது பாஜக தாக்குதல் நடத்துகிறது" - மல்லிகார்ஜுன கார்கே | congress | thanthi tv

Update: 2022-12-04 12:37 GMT

பிரிவினை சக்திகளுக்கு எதிராக ஒன்றுபட்டு போராடுவது காங்கிரஸ் கட்சியின் கடமை என அக்கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே கூறி உள்ளார். காங்கிரஸ் தலைவராக மல்லிகார்ஜுன் கார்கே பொறுப்பேற்ற பிறகு, காங்கிரஸ் வழிநடத்தல் குழுவின் முதல் கூட்டம் டெல்லியில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் முன்னாள் தலைவர் சோனியா காந்தி, ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகேல், மாநிலங்களவை எம்.பி. ப.சிதம்பரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்தக் கூட்டத்தில் பேசிய மல்லிகார்ஜுன் கார்கே, பாஜக அரசு நாட்டு மக்கள் மீதும், அவர்களின் உரிமைகள் மீதும் தாக்குதல் நடத்தி வருவதாகவும், மக்களைப் பாதுகாப்பது காங்கிரஸின் பொறுப்பு என்றும் கூறினார். மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்பட்டால் மட்டுமே தேர்தலில் வெற்றி பெற்ற முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்