குப்பைகளோடு குப்பையாக பொங்கி வந்த காவேரி
மயிலாடுதுறையில் உள்ள புஷ்கர துலா கட்டத்திற்கு வந்த காவிரி நீரை, மக்கள் மலர்தூவி வரவேற்றனர்.
மயிலாடுதுறையில் உள்ள புஷ்கர துலா கட்டத்திற்கு வந்த காவிரி நீரை, மக்கள் மலர்தூவி வரவேற்றனர். மேட்டூரில் திறக்கப்பட்ட காவிரி நீர், கடைமடை பகுதியான மயிலாடுதுறைக்கு வந்த நிலையில், புகழ்பெற்ற புஷ்கர துலா கட்டத்தை வந்தடைந்தது. அப்போது மக்கள் காவிரி நீரை மலர் தூவி வரவேற்று, வழிபாடு செய்தனர். இதனிடையே, துலா கட்டத்தில் இருந்த குப்பைகள் காவிரி நீரில் கலந்தால், அந்த பகுதி குப்பை கூளமாக காட்சியளித்தது.