இந்தியா தான் முதலிடம்.. டாப் 10 இடங்களில் உள்ள நாடுகள்.. வியக்கவைக்கும் ஐ.நா வெளியிட்ட தகவல்

Update: 2023-04-21 07:06 GMT
  • இந்தியாவின் மக்கள் தொகை தற்போது 142.82 கோடியாக அதிகரித்துள்ளதாக ஐ.நா தரவுகள் கூறுகின்றன.
  • சீனாவின் மக்கள் தொகை 142.57 கோடியாக உள்ளதால், சீனா இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.
  • 33.19 கோடி மக்கள் தொகையுடன் அமெரிக்கா மூன்றாம் இடத்தில் உள்ளது.
  • நான்காம் இடத்தில் உள்ள இந்தோனேசியாவின் மக்கள் தொகை 27.38 கோடியாக உள்ளது.
  • 23.14 கோடி மக்கள் தொகையுடன் பாகிஸ்தான் ஐந்தாம் இடத்தில் உள்ளது.
  • ஆறாம் இடத்தில் உள்ள பிரேசிலின் மக்கள் தொகை 21.43 கோடியாக உள்ளது.
  • ஏழாம் இடத்தில் உள்ள நைஜீரியாவின் மக்கள் தொகை தற்போது 21.34 கோடியாக உள்ளது.
  • 16.94 கோடி மக்கள் தொகையுடன் வங்க தேசம் எட்டாம் இடத்தில் உள்ளது.
  • ஒன்பதாம் இடத்தில் உள்ள ரஷ்யாவின் மக்கள் தொகை தற்போது 14.34 கோடியாக உள்ளது.
  • பத்தாம் இடத்தில் உள்ள மெக்சிகோவின் மக்கள் தொகை தற்போது 12.67 கோடியாக உள்ளது.
  • இந்தியாவை பொருத்தவரை, உ.பி.மக்கள் தொகை மட்டும் 24 கோடியாக உள்ளது. இது ஐந்தாம் இடத்தில் உள்ள பாகிஸ் தானின் மக்கள் தொகையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

மேலும் செய்திகள்