புதிய நாடாளுமன்ற கட்டடம் திறக்கப்பட்டதையொட்டி, உலகெங்கிலும் உள்ள இந்தியர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்த அவரது ட்விட்டர் பதிவில், நமது தேசத்தின் ஒளிமயமான கடந்த காலத்தையும், எழுச்சிமிக்க நிகழ்காலத்தையும், பிரகாசமான எதிர்காலத்தையும் பிரதிபலிப்பது நமது புதிய நாடாளுமன்ற கட்டடம் எனவும், அதன் வரலாற்று சிறப்புமிக்க திறப்பு விழாவில், உலகெங்கிலும் உள்ள ஒவ்வொரு இந்தியருக்கும் அன்பான நல்வாழ்த்துகள் எனவும் குறிப்பிட்டுள்ளார்.