கொட்டித் தீர்த்த கனமழை - முறிந்து விழுந்த 'சுதந்திர' மரம் | Freedom

Update: 2023-05-26 11:22 GMT

மேற்கு ஆப்பிரிக்க நாடான Sierra Leoneவில் கொட்டித் தீர்த்த கனமழையால் அந்நாட்டின் சுதந்திரத்திற்கு அடையாளமாகத் திகழ்ந்த பாரம்பரியமிக்க மரம் முறிந்து விழுந்தது. 1700களில், முன்பு அடிமைப்படுத்தப்பட்டிருந்த ஆப்பிரிக்க அமெரிக்கர்களில் ஒரு குழு, அமெரிக்கப் புரட்சிப் போரின் போது ஆங்கிலேயர்களுக்காக சண்டையிட்டதால், சுதந்திரம் பெற்றனர். அவர்கள் Sierra Leoneவில் குடியேறிய போது, இங்கு கூடி வேண்டுதல் நடத்தித் தான் தங்கள் சுதந்திர நாட்டிற்குள் குடியேறினர். அன்றிலிருந்து பல நூற்றாண்டுகளாக சுதந்திரத்தின் அடையாளமாகப் போற்றப்பட்டு வந்த 70 மீட்டர் உயரமுடைய இந்த இலவம்பஞ்சு மரம், கனமழையால் முறிந்து விழுந்து அழிந்து விட்டது. அந்நாட்டு அதிபர் ஜூலியஸ் மாடா தனது ட்விட்டர் பக்கத்தில் இதற்கு வருத்தம் தெரிவித்துள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்