இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (12-09-2022) | 11 PM Headlines | Thanthi TV | Late Night Headlines
அமைச்சர்கள், துறை சார்ந்த அதிகாரிகள் ஒரே நேர்கோட்டில் செயல்பட்டால் தமிழ்நாடு நம்பர் ஒன் இலக்கை அடையும்....
தமிழகத்தில் மழை, வெள்ள பாதிப்புகளை தடுக்க வடிகால் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்...அனைத்துத்துறை செயலாளர்களுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு...
அதிமுக முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி.வேலுமணி, சி.விஜயபாஸ்கருக்கு சொந்தமான இடங்களில் சோதனை...
அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாகவே லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை நடத்தப்பட்டதாக முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் குற்றச்சாட்டு....
மின் கட்டண உயர்வுக்கு எதிரான அதிமுகவின் போராட்டத்தை முடக்கவே சோதனை என்றும் முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி ஆவேசம்...
திமுக ஆட்சியில் ஐந்தாயிரம் கோடி அளவுக்கு ஊழல் நடந்துள்ளதாக எஸ்.பி.வேலுமணி குற்றச்சாட்டு....
மின் கட்டணம், வரிகளை உயர்த்தாமல் எந்த அரசையும் நடத்த முடியாது....
தமிழகத்தில் 20 ஆயிரம் சதுரமீட்டர் பரப்புக்கு மேல் கட்டப்படும் கட்டுமான பணிக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெறுவது அவசியம்....
சிஎம்டிஏ - சோழிங்கநல்லூர் - சிப்காட் இடையே பணிகளை விரைவுபடுத்துகிறது சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்...
பேராசிரியர்களுக்கு மன அழுத்தம் தரக்கூடாது என அண்ணா பல்கலைக்கழகத்துக்கு, தொழில்நுட்ப கல்வி இயக்குநரகம் உத்தரவு....
சென்னையைப் போன்று மதுரையில் குழந்தைகள் நல மருத்துவமனை அமைக்கக் கோரி வழக்கு.....
கரூரில் கல்குவாரிக்கு எதிராக போராடிய விவசாயி ஜெகநாதன் உயிரிழந்த விவகாரம்....
மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த ஜூலை 13ஆம் தேதி, பள்ளி நிர்வாகத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தினாரா தாய் செல்வி...?
பதிவு செய்யப்பட்ட கட்சிகள் 6 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடவில்லை என்றால் பட்டியலில் இருந்து நீக்கப்படும்...