வெடித்து சிதறிய மருந்து தயாரிப்பு நிறுவனம்.. குஜராத்தில் அரங்கேறிய கோர சம்பவம்

Update: 2023-02-28 08:30 GMT
  • குஜராத் மாநிலம் வல்சாத் அருகே மருந்து தயாரிப்பு நிறுவனத்தில் ஏற்பட்ட திடீர் வெடிப்பில், 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • குஜராத் மாநிலம் வல்சாத் மாவட்டம் சரிகம் நகரில் செயல்பட்டு வரும் மருந்து நிறுவனத்தில் இரவு திடீரென வெடிப்பு ஏற்பட்டது.
  • இதில், அங்கு இருந்த 2 அடுக்கு மாடி க‌ட்ட‌டம் இடிந்து விழுந்த‌தோடு, பயங்கரமாக தீ பற்றி எரிந்த‌து.
  • தகவலறிந்து சென்ற தீயணைப்புத்துறையினர் தீயை அணைத்தனர். இந்த விபத்தில் 3 தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர்.
  • 2 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
  • இடிபாடுளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.
  • தீ பரவாமல் இருக்க, அங்கு இருந்த ரசாயனப் பொருட்கள் பாதுகாப்பாக அப்புறப்படுத்தப்பட்டுள்ளன.
  • இதே போன்று, வெடிப்பு நடந்த பகுதியில் ஏராளமான ரசாயன நிறுவனங்கள் இருப்பதால், அங்கும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
Tags:    

மேலும் செய்திகள்