அகமதாபாத்தில் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற 2வது குவாலிஃபயர் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த குஜராத் அணி அதிரடியாக ரன்களை குவித்தது.
சிக்சர் மழை பொழிந்த தொடக்க வீரர் சுப்மன் கில் சதம் விளாசி அசத்தினார். 60 பந்துகளில் 10 சிக்சர்களுடன் 129 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
20 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 3 விக்கெட் இழப்புக்கு 233 ரன்கள் குவித்தது.
234 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய மும்பை அணி, சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பெரிதாக யாரும் பார்ட்னர்ஷிப் அமைக்காத நிலையில் சூர்யகுமார் யாதவ் 61 ரன்களும், திலக் வர்மா 43 ரன்களும் எடுத்தனர்.
18 புள்ளி 2 ஓவர்களில் 171 ரன்களுக்கு மும்பை அணி ஆல்-அவுட் ஆனதால், 62 ரன் வித்தியாசத்தில் வென்ற குஜராத், இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
குஜராத் தரப்பில் மோஹித் சர்மா, 5 விக்கெட்டுகளை சாய்த்தார்.
தோல்வி அடைந்து வெளியேறியதால், 5 முறை சாம்பியனான மும்பை அணியின் கோப்பைக் கனவு தகர்ந்தது
இந்நிலையில், நாளை 28ம் தேதி அகமதாபாத்தில் நடைபெறும் இறுதிப் போட்டியில் சென்னையுடன் குஜராத் பலப்பரீட்சை நடத்த உள்ளது.