இங்கிலாந்து-நியூசிலாந்து கடைசி டெஸ்ட் போட்டி - 24 ரன்கள் பின்தங்கிய நியூசி.
- இங்கிலாந்துக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியில் நியூசிலாந்து 24 ரன்கள் பின்தங்கியுள்ளது.
- வெலிங்டனில் நடைபெற்றுவரும் இந்தப் போட்டியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 435 ரன்களும், நியூசிலாந்து 209 ரன்களும் எடுத்தன.
- முதல் இன்னிங்சில் ஃபாலோ-ஆன் ஆன நியூசிலாந்து, 2வது இன்னிங்சை தொடங்கியது.
- லாதம், கான்வே தொடக்க ஜோடி முதல் விக்கெட்டுக்கு சிறப்பான தொடக்கம் தந்தது. லாதம் 83 ரன்களில் ஜோ ரூட் பந்துவீச்சில் எல்.பி.டபிள்யூ ஆனார்.
- மற்றொரு தொடக்க வீரர் கான்வே 61 ரன்களில் லீச் பந்துவீச்சில் வீழ்ந்தார். 3ம் நாள் ஆட்ட முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 202 ரன்கள் எடுத்துள்ள நியூசிலாந்து, இங்கிலாந்தைக் காட்டிலும் 24 ரன்கள் பின்தங்கி இருக்கிறது.