"அப்பிடித்தான்டா பேசுவேன் நீ என்ன பண்ணுவ !" - கீழ்த்தனமாக பேசிக்கொண்ட மருத்துவர்கள்...வெளியானா ஆடியோ
சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் பொது மருத்துவமனையில் இருதய அறுவை சிகிச்சை துறை தலைவராக பொன் ராஜராஜன் பணியாற்றி வருகிறார். அவர் கார் நிறுத்துமிடத்தில், மயக்கவியல் உதவி மருத்துவர் பிரதீப் என்பவர் கார் நிறுத்தியுள்ளார். இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதனிடையே காரின் டயரில் இருந்த காற்றானது பிடுங்கி விடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பொன்ராஜராஜன் மற்றும் பிரதீப் ஆகியோர் செல்போனில் ஒருவரை ஒருவர் திட்டிக் கொண்டு கடுமையான வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.