தமிழகத்தில் விளையாட்டு திட்டங்களுக்கு மத்திய அரசின் நிதி எவ்வளவு தெரியுமா..? வெளியான தகவல்
பல்வேறு மாநிலங்களுக்கு விளையாட்டு உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி தொடர்பாக மக்களவை உறுப்பினர் சௌமித்ரா கான் கேள்வி எழுப்பி இருந்தார்.
இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்துள்ள மத்திய விளையாட்டு துறை அமைச்சர் அனுராக் சிங் தாகூர், நாடு முழுவதும் கடந்த மூன்று ஆண்டுகளில் விளையாட்டு உட்கட்டமைப்பு திட்டங்களுக்கு ரூ.1799 கோடியே 54 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளளார்.
இதில் தமிழகத்திற்கு கடந்த 3 ஆண்டுகளில் விளையாட்டு உக்கட்டமைப்பு திட்டங்களுக்கு 19 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
நாட்டிலேயே மிக அதிகபட்சமாக குஜராத் மாநிலத்திற்கு ரு.586.99 கோடியும், உத்தரபிரதேசம் மாநிலத்திற்கு ரூ.346.26 கோடியும், அடுத்ததாக கர்நாடக மாநிலத்திற்கு ரூ.127.25 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.