வேற லெவல் நீங்க...உணவுக்கு கையேந்திய மாற்றுத்திறனாளி...சோஷியல் மீடியா மூலம் பின்னர் நடந்த நெகிழ்ச்சி சம்பவம்

Update: 2023-05-31 03:29 GMT

மயிலாடுதுறையை அடுத்த சித்தர்காடு இந்திரா நகரைச் சேர்ந்தவர் ஆறுமுகம். நடக்க முடியாத மாற்றுத்திறனாளியான இவருக்கு திருமணமாகாத நிலையில், உறவினர்கள் என்று யாரும் இல்லாமல் தனிமையான சூழலில் வாழ்ந்து வந்தார். 50 வயதை கடந்த இவருக்கு வருமானம் இல்லாததால், அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் தரும் உணவை வாங்கி சாப்பிட்டு பொழுதை கழித்து வந்தார். இவரது நிலைமையை மயிலாடுதுறையில் அறக்கட்டளை நடத்தி வரும் பாரதிமோகன் என்பவர், வீடியோவாக எடுத்து சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதைப் பார்த்த சேலத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர், ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுத்து உதவ முன்வந்தார். இதன் மூலம் அவருக்கு இந்திரா நகரில் பெட்டிக்கடை அமைத்துக் கொடுத்துள்ளனர். அந்த பெட்டிக் கடையை மயிலாடுதுறை காவல் ஆய்வாளர் செல்வம் திறந்து வைத்து, விற்பனையைத் தொடங்கி வைத்துள்ளார். சமூக வலைதளங்கள் இளைஞர்களை கெடுக்கும் என்ற குற்றச்சாட்டு வைக்கப்படும் நிலையில், ஆக்கபூர்வமாக பயன்படுத்தலாம் என்பதை இந்த சம்பவம் உணர்த்தியுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்