சென்னையில் உள்ள அடையாறு கூவம் மற்றும் பக்கிங்காம் கால்வாயினை, நவீன தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி புனரமைப்பதற்கான ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் தமிழ்நாடு மற்றும் டென்மார்க் இடையே கையெழுத்திடப்பட்டது. இது, டென்மார்க் சுற்றுச்சூழல் அமைச்சர் மாகனஸ் யோஹான் ஹய்னிகா மற்றும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், ஆகியோர் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.