பேசிய பேச்சுக்கு பெண்ணின் கையால் வாயிலேயே விழுந்த அடி..ஒன்று கூடி பொளந்து கட்டும் வீடியோ
நாமக்கல் அருகே மதுபோதையில் ரகளையில் ஈடுபட்ட நபருக்கு தர்ம அடி விழுந்துள்ளது. பொம்மைகுட்டை மேடு பகுதியில் பார்வதி என்பவர் டீ கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடைக்கு வந்த இளைஞர் ஒருவர், பைக்கை கடையின் குறுக்கே நிறுத்தியுள்ளார். அப்போது, வாகனத்தை ஓரமாக நிறுத்தும்படி கடையின் உரிமையாளர் பார்வதி கூற, தகாத வார்த்தைகளால் பேசி தாக்க முயன்றுள்ளார். தொடர்ந்து, அங்கிருந்தவர்கள் இளைஞரை அப்புறப்படுத்த முயன்றுள்ளனர். இருப்பினும், இளைஞர் தொடர்ந்து தகாத வார்த்தைகளில் பேசியதால், ஆத்திரமடைந்த பார்வதி மற்றும் கடை ஊழியர்கள் போதை இளைஞரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர்.