குடிபோதையில் மரண விளிம்பில் படுத்திருந்த நபர்..மூச்சை நிறுத்தும் வீடியோ | Kerala
கேரளா மாநிலம் கண்ணூர் மாவட்டத்திலுள்ள பன்னென் பாறையில் சிராக்கல் பகுதியைச் சேர்ந்த ஒருவர் குடிபோதையில் ரயில் தண்டவாளத்தில் படுத்திருந்தார். அவர் படுத்திருந்த தண்டவாளத்தை ரயில் கடந்து சென்றது, இதில் அவர் காயமின்றி உயிர் தப்பினார். ரயில் கடந்து சென்ற பின் அவர் எழுந்து செல்லும் காட்சி தற்பொழுது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இந்த சம்பவம் குறித்து ரயில்வே போலீசார் விசாரணை செய்து வருகின்றனர்.