வண்டியில் செல்லும் போதே நசுங்கிய உடல்..துடிதுடித்து பலியான 2 பேர்..நினைத்து பார்க்க முடியா மரணம்
கோவை கிணத்துக்கடவு அடுத்த சிகலாம்பாளையத்தை சேர்ந்த கட்டிட ஒப்பந்ததாரர் முருகசாமி என்பவர் பணி முடித்த பின்னர் வட மாநில தொழிலாளர்கள் இருவருடன் அரசம்பாளையத்திற்க்கு சென்றுள்ளார். அப்போது சொலவம்பாளையம் அருகே சாலையோரம் இருந்த மரத்தின் ராட்சத கிளை இருசக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீது விழுந்தது. இதில் உடல் நசுங்கி வடமாநில தொழிலாளர்கள் அதுல் குமார், உமேஷ்குமார் ஆகிய இருவரும் உயிரிழந்த நிலையில், படுகாயமடைந்த முருகசாமியை தீயணைப்புத்துறையினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து காரணமாக அப்பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்ட நிலையில், பொக்ளைன் எந்திர உதவியுடன் போலீசார் மரக்கிளையை அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர்செய்தனர்.